எனது கடவுள் என்னை எவ்வாறு குணப்படுத்தினார்
30 வருட காலமாக 7 தர்மா காவலர்களும் வாக்குக் கொடுத்தல், கணித்துச் சொல்லுதல், மற்றும் குணப்படுத்துதல் போன்ற செயலுக்குச் சோஜெ லாவை அதிகாரப்பூர்வ தொடர்பாளராக பயன்படுத்தி வருகின்றனர். சோஜெ லா சாமானியரோ அல்லது சாதாரண துறவியோ அல்ல. இவர் க்யாப்ஜே த்ரிஜாங் ரின்போச்சே, க்யாப்ஜெ டோமோ கேஷே ரின்போச்சே ஆகிய இருவராலும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்டவர். க்யாப்ஜெ த்ரிஜாங் ரின்போச்சே அவர்களால் 40 வருடங்களுக்கு முன்பே முழுமையாக அதிகாரப்பூர்வ கணிப்பாளராக நியமிக்கப்பட்டவர். சிறப்பான வணக்கத்திற்குரிய லாமாக்கள் சிறந்த பயிற்சியளித்து, சோஜெ லாவிற்க்காக தடைகள் நீக்கி, 7 தர்மா காவலர்களை அருள் வழி தொடர்பு கொள்ளுமாறு உருவாக்கினர். சோஜெ லா செர மே மடத்தில் உருவாக்கப்பட்டவர். இப்பொழுது செர்பொம் மடத்தைச் சார்ந்திருக்கிறார். மூன்று வருடத்திற்கு முன் அக்டோபர் 2011 இறுதி வரை சோஜெ லாவுடன் எனக்கு நல்ல அறிமுகமோ அல்லது நெருங்கிய நட்போ கிடையாது.
சில வருடங்களுக்கு முன்னால் சீன பாரம்பரிய மருத்துவர் எனது கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக் கண்டுபிடித்து மேல் நாட்டு மருத்துவ பரிசோதனைக்குச் செல்லுமாறு கூறினர். எனது கல்லீரல் இறுகிக்கொண்டு வருவதாகவும் சிகிட்சை செய்யாவிட்டால் அது தீர்க்க முடியாத வியாதியாக மாறிவிடும் என கண்டுபிடிக்கப்பட்டது. நுட்ப சோதனைக்குப் பிறகு பத்திய உணவு கொடுக்கப்பட்டு பிரத்தியேகமான மருந்தும் அதற்காக கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனது மாணவர்கள் சோஜெ லாவின் உதவியாளர்களைத் தொடர்புகொண்டு சோஜெ லாவுக்கு அருள் வரும்பொழுது இந்த வியாதியைக் குணப்படுத்த பூஜைகள் செய்ய வேண்டுமா அல்லது வேறு ஏதாகிலும் உதவியை நாடவேண்டுமா என கேட்கச் சொல்லியிருந்தார்கள்.
மலேசிய விமான நிலையத்தில் வந்திறங்கிய சோஜெ லாவும் அவருடைய சீடர்களும் என்னைப் பார்க்க வருவது எனக்குத் தெரிய வந்தது. அவர் என் வீட்டிலேயே தங்கியது எனக்குப் பெருமையாக இருந்தது. அப்பொழுதுதான் அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். அவர் நன்கு கற்றறிந்த, அனுபவம் பெற்ற, கருணை உள்ளம் கொண்ட துறவி என்பது தெரிய வந்தது. அவருக்கென்று சிறப்பான வரவேற்பை எதிர்பார்க்க மாட்டார். அவர் தன்னுடைய குருவுக்கு மிகவும் விசுவாசமானவர். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். அவர்பால் எனக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் அதிகரித்தது. அவருடைய நட்பு கிடைத்ததை நான் பெரும் பாகியமாகக் கருதுகிறேன். அவர் உண்மையில் நல்ல மனிதர். அவருடைய இந்த குணாதிசயங்களால் நான் ஈர்க்கப்பட்டேன். தூய்மையான துறவிகள் தர்ம காரியங்களுக்கு மிகவும் தேவையானவர்கள். அவருடைய குணங்கள் எனக்கு ஊக்கமாக இருந்தது. என்னுடைய கஷ்ட காலங்களின்போது, என் வேண்டுகோலுக்கு இணங்க தர்மா காவளரை எனக்காக தொடர்புகொண்டு, சரி எது தவறெது என முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு பெரிய மாற்றத்தை ஏற்டுத்தியுள்ளார்.
சோஜெ லா மலேசியா வந்தடைந்து, அருள் வழி தர்மா காவளரை தனக்குள் வரவழைத்தார். தர்மா காவளர் அன்போடும் கருணையோடும் என்னிடம் பேசினார். அவர் என்னை அமர வைத்து என்னுடைய உடலில் கல்லீரல் இருக்கும் பகுதியில் கை வைத்து சில மந்திரங்களைச் சொல்லி இலேசாக தேய்த்து எதையோ எடுப்பதுபோல் செய்தார்.. பிறகு சிறிது ஆசீர்வதித்த அரிசியைக் கொடுத்து என்னைச் சாப்பிடச் சொன்னார். மேலும் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து தண்ணீரில் ஊர வைத்து அந்தத் தண்ணீரை ஒரு வாரத்திற்குக் குடிக்கச் சொன்னார். அவர் என்னை சில பூஜைகள் செய்யுமாறும் சில மந்திரங்களை ஓதிக்கவும் ஆலோசித்தார். எனக்கு மிகவும் வியப்பாகவும் இருந்தது அதே சமயத்தில் மானசீகமாக அவருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன். இதற்குப் பிறகு நான் சோஜெ லா உடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன், ஒருவருக்கொருவர் நன்றாக அறிமுகமாணோம். அவருடைய நட்புக்கு நான் தகுதி இல்லாதவனாக இருந்தாலும்கூட எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. காரணம் அவர் முதுமையான சிறந்த துறவி. நாங்கள் இப்பொழுது நண்பர்கள். அதன் பிறகு அவர் தைவானுக்குக் புறப்பட்டுவிட்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு நான் சிங்கப்பூருக்கு மருத்துவ சோதனைக்குச் சென்றிருந்தேன். அங்கு மருத்துவர்களிடம் இருந்து என்னாலேயே நம்ப முடியாத செய்தி ஒன்று கிடைத்தது. என்னுடைய கல்லீரலில் ஆச்சரியப்படும் அளவிற்கு துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். இந்த மாற்றம் நிலையானது இல்லை. கவணிக்கவில்லை என்றால் மீண்டும் வர வாய்ப்புள்ளது என்றார்கள். மறுமுறை நான் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றபொழுது மிக வேகமாகக் குணமடைந்து வருவதாகக் கூறினர். இது எப்படி சாத்தியமானது, நீ என்ன செய்தாய் என்று என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களிடம் திபெத் துறவியும் மூலிகை வைத்தியருமான எனது நண்பர்தான் நான் குணமடைய உதவி செய்தாரறென நகைச்சுவையாக கூறினேன். என்னுடன் வந்த எனது மாணவர்கள் இதையெல்லாம் கண்ணுற்றனர். தேவையான நேரத்திலும் நோயுற்றபோதும் முன் வந்து எனக்கு உதவி செய்த சோஜெ லா அவர்களுக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். பல வருடங்களாக அவருடைய இரக்கக் குணத்தைப் பார்த்து வியந்துள்ளேன். அன்றிலிருந்து அவர் எனக்காக தர்மா காவளர்களின் அருள் வழி நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சரியான கணிப்பைக் கூறி உதவினார். இதுநாள் வரை கால தாமதம் ஆனாலும் தீர்க்கதரிசிபோல் அவருடைய கணிப்பு உண்மையாகவும், சரியாகவும் பலித்துள்ளது. சிலருக்கு இது மாய மந்திரம் போல் தெரியும். புத்தர் மற்றும் அவருடைய தர்மா காவளர்களின் சக்தியை நாம் அளவிட முடியாது. வான் மண்டலத்திலிருந்து அறிவொளியையும், ஞானத்தையும் பெறும் திறமை கொண்டவர்கள். ஒரு பாரம்பரியத்தில் இது போன்று நடப்பதால் நமது கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகளாளும், நமது பாரம்பரியத்தினாலும் இதை யெல்லாம் நம்ப மறுக்கிறோம். நமக்குத் தெரியாததால் இவையெல்லாம் உண்மை இல்லை என்று ஆராயாமல் ஒதுக்கிவிட முடியாது. அப்படி செய்தால் இழப்பு நமக்குதான். வணக்கத்திற்குரிய க்யாப்ஜெ சொங் ரின்போச்சே அவர் வாழும் காலத்தில் குறி சொல்பவர்களின் ஆலோசனை மற்றும் சிறந்த லாமாக்களின் அறிவுரைகள் ஆகியவற்றைக் கேட்டு நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். என்னை இதில் ஈடுபடுத்தியதால் நான் அவர்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டேன். திபெத் அதிக மர்மங்களையும், மாயங்களையும் கொண்ட நாடு. நான் என் கண்களாலேயே என் உடலில் நடந்த இந்த வியக்கத்தக்க நிகழ்வைப் பார்த்தேன். இந்த நிகழ்வே இது உண்மை என நம்ப வைக்கிறது.
செரா மடத்தைச் சார்ந்த சொஜெ லா அவருடைய தந்தையைப்போல் குறி சொல்வதில் சிறந்தவர். இவருடைய தந்தை புகழ்பெற்ற குறிசொல்லும் பங்லுங். இவர்கள் பரம்பரையாகக் குறி சொல்பவர்கள். சொஜெ லாவின் தந்தைதான் தலாய் லாமா திபெத்தை விட்டுச் செல்லவேண்டுமென்று குறி சொன்னவர். இது அந்த சம்பவத்தைப் பார்த்த சீடர்கள் சொன்னது. 1959 ல் பிரச்சனையான தருனத்தில் தலாய் லாமா அவருடைய குருவான க்யாப்ஜெ த்ரிஜாங் ரின்போச்சே அவர்களைத் தொடர்பு கொண்டார். க்யாப்ஜெ த்ரிஜாங் ரின்போச்சே சிலருடைய உதவியுடன் சொஜெ லாவின் தந்தையான புகழ்பெற்ற குறி சொல்லும் பங்லுங்கை தொடர்பு கொண்டார். காரணம் அவர் சொல்வது அப்படியே நடக்கும். ஆகவே இந்த புகழ் பெற்ற குறி சொல்பவர் உடனே தர்மா காவளரை அருள் வழி தொடர்பு கொண்டு தடைகளை நீக்கி ஒரு வாளை தலாய் லாமாவிடம் கொடுத்து இந்தியாவிற்குத் தப்பித்துச் செல்லும் போது உடன் கொண்டு செல்லும்படி கூறினார். இந்த வாளை தப்பித்துச் செல்லும் குழுவிலிருந்த நூற்று கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். இந்த வாள் இப்பொழுது பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் சென்றதன் நினைவாக ஒவ்வொரு நாளும் வாள் கையில் ஏந்தப்பட்டு ஊதுபத்தி கொளுத்தப்படுகிறது.
ஆகவே இப்பொழுது இருக்கும் குறி சொல்பவரின் தந்தை திபெத்தில் புகழ்பெற்ற குறி சொல்பவர். இவர் பல காலம் திபெத்திலேயே வாழ்ந்து அங்கேயே இறைவனடி சேர்ந்தார். இவர் வாழும் காலத்தில் ஆலோசனைகளுக்காக தன்னை நாடி வரும் பல பேருக்கு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் கணிப்பைக் கூறி உதவி செய்துள்ளார். இவர் காச்சே மார்போவின் அருள் பெறுவதில் புகழ் பெற்றவர். ஆகவே இப்பொழுது இருக்கும் சொஜெ லா குறி சொல்பவரும் புகழ் பெற்றவராகவும், மிகவும் மதிக்கத்தக்கவராகவும் இருக்கிறார். இவர் திபெத், நேப்பால், இந்தியா மற்றும் பல இடங்களில் நன்கு அறிமுகமானவர். இவர் எனக்காகவும் என்னுடைய சொந்த பயனுக்காகவும் பல முறை தர்மா காவளரை அருளில் கொண்டுவந்துள்ளார். இவருடைய தர்மா பயன்பாடு, தூய்மை, திறமை ஆகியவற்றுக்கு நான் கடன்பட்டவனாவேன். இவர் எங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறார். எனது மரியாதைக்குறியவர் ஆகயால் இவருடைய புகைப் படத்தையும், இவரைப் பற்றிய அகப்பக்கத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளேன். நீங்களும் இவரை ஒரு நாள் சந்திப்பீர்கள் என நம்புகிறேன். இவர் சிறந்த குறி சொல்பவர் என்பதையும் தாண்டி சாதாரணமானவர், மென்மையானவர், இரக்கக் குணம் படைத்தவர், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர் இதனினும் மேலாக அழுத்தமான குரு பக்தி உடையவர். இந்த குணமெல்லாம் ஒரு நாள் எனக்கும் வரவேண்டும் என விரும்புகிறேன். பங்லுங் குதென் அவர்களுக்கும் இவரைப்போல் வருவதற்கான தகுதிகள் உண்டு. இவருடைய முன்ஜென்மத்தில் இவர் புத்தருக்குச் சீடராக இருந்து பணிவிடை செய்துள்ளார் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. சொஜெ லா என்னிடம் இரக்கத்தைக் காட்டியதற்கும், எனக்குத் தூண்டுதலாக இருந்ததற்கும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். உங்களுடைய ஆன்மீகத்துக்கும், இரக்கக் குணத்திற்கும் தலை வணங்குகிறேன். ஒரு நாள் நானும் உங்களைப் போல் வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
திசெம் ரின்போச்சே
(சொஜெ லா அருளாடும் பல காணொலி படங்கள் யூ டியூப்பில் இருக்கிறது. அதையும் பார்க்கலாம்)
இது தொடர்பான மேலும் பல எழுத்துப் முக்கிய படிவங்களை காண : https://www.tsemrinpoche.com/tsem-tulku-rinpoche/category/dorje-shugden
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details