உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே,
கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்டில் இருக்கும் அழகான விஸ்டம் மண்டபத்தில், ஞானம் பெற்ற உலக அமைதி காவலர் டோர்ஜே ஷுக்டேன், தனது பரிவாரங்களான 32 உதவியாளர்களுடன் அமர்ந்திருக்கின்றார். இந்த டோர்ஜே ஷுக்டேனின் சிலை 25 அடி (7.3மீட்டர்) உயரத்தில், உலகிலேயே மிக உயரமான டோர்ஜே ஷுக்டேன் சிலையாக திகழ்கின்றது. டோர்ஜே ஷுக்டேன் சிலையைச் சுற்றி இடது மற்றும் வலது புறங்களில் உள்ள சுவர்களில் நம்முடன் நெருங்கிய தொடர்புள்ள மரபுவழி லாமாக்கள் இடம் பெற்றுள்ளனர்.
நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு ஆசிகள் வழங்கி வேண்டுதல்களை நிறைவேற்றுவதால், மரபுவழி லாமாக்கள் மிகவும் முக்கியமானவர்கள். பொது வழிபாட்டு முறைப்படி தாந்த்ரீகத்தில் ஈடுபடும் பொழுது, லாமக்களின் ஆசிகளைத் தினசரி பெறுவதற்கு, நாம் ஒவ்வொரு மரபுவழி லாமாக்களின் பெயர்களையும் உச்சரிக்க வேண்டும். வஜ்ரதாரா புத்த சமயத்தின்படி, வழிபாட்டாளர்கள் தங்களின் மரபு வழி குருவின் ஆசியைப் பெறாமல் எந்தவொரு பயனையும் அல்லது வேண்டுதல்களையும் அடைவதில் வெற்றி காண மாட்டார்கள். இதனால்தான் நாம் புனித மரபுவழி லாமாக்களைத் தொழுது அஞ்சலி செலுத்தி மற்றும் நமது வழிபாட்டில் அவர்களை எழுப்பி நம்மை ஆசிர்வதிக்கச் செய்கின்றோம்.
விஸ்டம் மண்டபம், டோர்ஜே ஷுக்டேனுக்கான கேச்சாராவின் தொழுமிடமாகும் மற்றும் அது அதற்காகவே உருவாக்கப் பட்டது. கீழ்காணும் படங்களில் நீங்கள் சாக்கியமுனி புத்தரின் சிலையைக் காண்பீர்கள். இந்த சிலை இங்கே தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதோடு கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட் நிலத்தின் முன்பகுதியில் பிரதான வழிபாட்டு மண்டபம் அமைக்கப்பட்டவுடன் அங்கு கொண்டு செல்லப்படும்.
இதோ, நீங்கள் மகிழ்வுற உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள நினைத்த, நமது திறமை வாய்ந்த பாஸ்தர் லோ செங் பியு அவர்களால் பல கோணங்களில் எடுக்கப்பட்ட டோர்ஜே ஷுக்டேன் மற்றும் மரபுவழி லாமாக்களின் அழகான புகைபடங்கள்.
- விஸ்டம் மண்டபம்
- இடது புறத்தில் உள்ள மரபுவழி லாமாக்கள்
- வலது புறத்தில் இருக்கும் மரபுவழி லாமாக்கள்
- எங்களைக் காண வருகை தாருங்கள்!
விஸ்டம் மண்டபம்
தகவல்கள்
- உலகிலேயே மிகப் பெரிய டோர்ஜே ஷுக்டேன்
- உயரம் : 25 அடி (7.3.மீட்டர்)
- மூலப்பொருள்:செம்பு
- சிலையின் கட்டுமானம்: ஆறு மாதங்கள்
- உள்ளடக்கம்: புனித உரைகள், லட்சம் கோடி புத்தரின் படங்கள், வழிபாடுகள், மந்திரங்கள்
- இடம்: விஸ்டம் மண்டபம் ( மலேசியாவிலுள்ள கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட், டோர்ஜே ஷுக்டேன் பூஜையறை).
இடது புறத்தில் உள்ள மரபுவழி லாமாக்கள் >>
இடது புறத்தில் உள்ள மரபுவழி லாமாக்கள்
துல்சின் ட்ராக்பா கியால்ட்சேன், திபெத்திய புத்த சமயத்தின் கெலுக் மரபைத் தோற்றுவித்த லாமா சோங்காபாவின் 8 முக்கிய சீடர்களில் ஒருவராவார். இவரின் ‘துல்சின்’ என்ற பெயர், அதாவது ‘வினை தாங்குபவர்’ என்ற பொருளின் மொழிபெயர்ப்பான ‘துல்வா சின்பா’ என்பதன் சுருக்கமாகும். இதற்கு காரணம், வினயா அல்லது மடலாய உறுதி மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றாகும். அவர், லாமா சோங்காபாவின் விளக்கமான நாகார்ஜூனா மத்கியாமிகாவின் (நடு நிலை தத்துவம்) அசாதரணமான பாதுகாவலராய் வருவார் என உறுதி அளித்தார். தன்னுடைய மறுபிறவியில் அவர் டோர்ஜே ஷுக்டேனாக உயர்ந்து தனது உறுதி மொழியை நிறைவேற்றினார்.
துல்கு டிராக்பா கியால்ட்சேன் அவர்கள் டுல்சின் டிராக்பா கியால்ட்சேன் அவர்களின் அடுத்த அவதாரமாகும். அவர், மிக உயரிய லாமா, அதோடு புனித 4-ஆவது பன்சென் லாமா பன்சென் லோப்சாங் சோக்யீ கியால்ட்சேனின் சீடராவார் மற்றும் புனித 5-ஆவது தலாய் லாமாவின் சம காலத்தில் வாழ்ந்தவராவார். உலக தர்ம காவலர் நேச்சுங் அவர்களால் தனது வாக்குறுதி நினைவுப்படுத்தப்பட்டவுடன் அவர் தனது முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றி மறையும் தறுவாயில் டோர்ஜே ஷுக்டேனாக உயர்ந்தார்.
புனித 10-ஆவது பன்சென் லாமா அவர்கள், தாஷி லுன்போ பிக்கு மடாலாயத்தைச் சார்ந்த மிகச் சிறந்த டோர்ஜே ஷுக்டேனின் வழிப்பாட்டாளர் மற்றும் அவர் தற்போதைய 14-ஆவது தலாய் லாமாவின் சமகாலத்தைச் சேர்ந்தவர். அவர் டோர்ஜே ஷுக்டேனுக்கு தனது சுங்பும் அல்லது வேலைகளின் தொகுப்புகளில் உள்ளடக்கியுள்ள வழிபாட்டு உரைகளை இயற்றியுள்ளார். அவரின் அவதாரங்கள் சாக்கியமுனி புத்தரின் காலத்தில் துவங்கியது மற்றும் அபிதாமாவின் அவதாரமாக கருதப்படுகின்றது.
புனிதர் திரிஜாங் ரின்போச்சே அவர்கள் புனிதர் 14-ஆவது தலாய் லாமாவின் சீடர் ஆவார். ஆதலால், அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திபெத்திய புத்த சமயத்தின் கெலுக் மரபைச் சார்ந்த அனைத்து உயர் லாமாக்களுக்கும் குரு ஆவார்.அவரின் அவதாரங்கள் சாக்கிய முனி புத்தரின் தேரோட்டியான சந்திராவின் காலத்தில் துவங்கியது. அவர், டோர்ஜே ஷுக்டேனின் முழு வரலாறு, வழிபாடுகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றின் முழு குறிப்புகள் அடங்கிய உரையான ‘சமுத்திரத்தின் பாதுகாவலர்களை மகிழ்ச்சியூட்டும் இசை’ என்ற உரையை எழுதியதற்குப் புகழ் பெற்றவர்.
புனிதர் சோங் ரின்போச்சே அவர்கள் புனிதர் திரிஜாங் ரின்போச்சே அவர்களின் மாணவர் மற்றும் டோர்ஜே ஷுக்டேனின் மிகச் சிறந்த வழிபாட்டாளர். புத்த சமயத்தில் தேர்ச்சி பெற்றதற்கு பெயர் போன அவர், திபெத்திலுள்ள காடேன் ஷார்ட்சே மடாலயத்தின் மடாதிபதியாவார். அவர் பேரருட்திரு 25-ஆவது திசெம் ரின்போச்சே அவர்களின் அடிப்படை குரு ஆவார். தனது பேச்சுத் திறனுக்கும் புகழ்பெற்ற மிகச் சிறந்த மரபுவழி குரு ஆவார். அவர் தனது பேச்சுத் திறமையால் கறுப்பு நிறத்தை வெள்ளை நிறமென்று அல்லது வெள்ளை நிறத்தை கறுப்பு நிறமென்று நம்பும் அளவிற்கு ஒருவரை கவரும் ஆற்றல் மிகுந்தவர் என்று கூறப்படுகின்றது.
வலது புறத்தில் இருக்கும் மரபுவழி லாமாக்கள்
பன்சென் சோனம் டிராக்பா, முதன்மையான உயர் லாமா ஆவார் மற்றும் அவர் 2-ஆவது தலாய் லாமா, கென்டுன் கியாட்சோ அவர்களின் மாணவரும் 3-ஆவது தலாய் லாமாவான, சோனம் கியாட்சோவின் குருவும் ஆவார். அவர் கியோதோ தாந்த்ரிக் கல்லூரி, கன்டென், சேரா மற்றும் ட்ரெபுங் போன்ற பிக்கு மடாலயங்களின் மடாதிபதியாவார். அதோடு மட்டுமின்றி, அவர் 15-ஆவது கெலுக் மரபுவழியின் தலைவராக காடேன் அரியணையில் அமர்ந்திருந்தார். மற்ற எந்த லாமாக்களாலும் இந்த சாதனையைத் தொடர முடியவில்லை. ட்ரெபுங் லோஸ்லிங் மற்றும் காடேன் ஷாட்சேவில் உள்ள புத்த துறவிகள் இன்றும் அவரின் பாடப்புத்தகங்களை தங்களின் கேஷே தேர்வுக்குப் பயில்கின்றனர்.
புனிதர் தக்பூ டோர்ஜே சாங் (தக்பூ பேமாவஜ்ரா என்றும் அறியப்படுகின்றார்) அவர்கள், கியாப்ஜே பாபோங்கா ரின்போச்சேவின் குரு ஆவார். இவர், புத்தர்களின் புனித தரிசனங்களைப் பெற்றதற்கும் துஷிதா போன்ற புனித தலங்களுக்கு சென்று வரும் வல்லமை கொண்டதற்கும் பெயர் போனவர். கியாப்ஜே பாபோங்கா ரின்போச்சே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தக்பூ டோர்ஜே சாங் துஷிதாவிற்கு மேலே எழும்பி சென்று வாழ்வின் நம்பிக்கையூட்டும் உபநயனமும் டோர்ஜே ஷுக்டேனின் உபதேசங்களையும் லாமா சோங்காபா மற்றும் துல்சின் டிராக்பா கியால்ட்சேன் அவர்களிடமிருந்து பெற்றார். அவர் பின்பு மீண்டும் கீழே வந்து தனது உபநயனத்தையும் உபதேசங்களையும் கியாப்ஜே பாபோங்கா ரின்போச்சேவிடம் அளிக்க, கியாப்ஜே பாபோங்கா ரின்போச்சே அதனைப் பெருக்கினார்.
புனிதர் பாபோங்கா ரின்போச்சே அவர்கள் 20-ஆவது நூற்றாண்டில் மிகவும் செல்வாக்கு மிகுந்த கெலுக் லாமாக்களில் ஒருவராவார். அவர் லம்ரிம் பற்றி விரிவாக போதித்திருக்கின்றார்- ஞான உபதேசங்களை அடையும் பாதை குறித்த அத்தியாயங்கள்.அதோடு, அவர் வஜ்ரயோகினி மற்றும் டோர்ஜே ஷுக்டேன் வழிபாடுகளை விரிவாக்கம் செய்ததற்கும் பெயர் போனவர். உண்மையில், அவர், சாக்கிய மற்றும் கெலுக் பாரம்பரியத்தில் உள்ள விஷயங்களை இணைத்து ஒரு புதிய வஜ்ரயோகினி சாதானாவை எழுதியுள்ளார். அதோடு மட்டுமின்றி, ‘மென்மையான மத்தளம் அனைத்து திசைகளிலும் வெற்றி’ என்ற டோர்ஜே ஷுக்டேன் நிறைவேற்ற உரையைத் தொகுத்தார்.
கென்சுர் ஜப்பா யேஷே ரின்போச்சே அவர்கள் ஒரு அறிஞர் அதோடு தலாய் லாமா மற்றும் இதர உயர் லாமாக்களின் மற்றும் கேஷேக்களின் முன்னிலையில் லஹரம்பா கேஷே இளங்கலை (புத்த கல்வியில் முனைவர் படிப்பிற்கு நிகரானது) பெற்ற குரு ஆவார். அவர், பின்னர் காடேன் ஷார்சே பிக்கு மடத்தில் 7 வருட காலத்திற்கு மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பேரருட்திரு திசெம் ரின்போச்சே அவர்கள் ரின்போச்சே அங்கீகாரம் கிடைப்பதற்கு முன் இந்த லாமாவைச் சந்தித்து அவரின் உதவியாளராக பணிபுரிந்தார். தன்னலமற்ற போதிசத்துவராக இருந்ததற்காக அவர் மிக உயர்வான மரியாதையை அடைந்தார்.
பேரருட்திரு காங்சேன் ரின்போச்சே அவர்கள் மருத்துவ புத்தரின் அவதாரமாக நம்பப்படுவதோடு அவரின் பிறப்புகளில் மகா சித்தர் டாரிகாபாவும் அடங்குவார். அவர் தனது சக்தி வாய்ந்த ஞானதிருஷ்டி மற்றும் வழக்கத்திற்கு மாறான மகா சித்தர் குணாதிசியங்களுக்குப் புகழ் பெற்றவர். காங்சேன் ரின்போச்சே அவர்கள் திசெம் ரின்போச்சேவை நேபாளத்தில் பார்த்தவுடனேயே கண்டுகொண்டதாகவும் அதனால் அவரின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பிக்குகள் மடலாயத்தில் நடந்ததாகவும் கூறப்படுகின்றது. காங்சென் ரின்போச்சே அவர்கள் நிறைய தனிப்பட்ட அறிவுரைகளும் உபதேசங்களும் திசெம் ரின்போச்சே அவர்ளுக்கு வழங்கியுள்ளார்.
எங்களைக் காண வருகை தாருங்கள்!
பகாங் பெந்தோங்கின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட், 35-ஏக்கர் நிலப்பரப்பில் இதுவரை காணாத ஓர் இடமாகும். மலேசியாவின் வெப்ப வலயக் காட்டின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆன்மீக சரணாலயத்தில் நீங்கள் முழுமையான ஆரோக்கியத்தை வளர்க்க முடியும். நவீன பட்டணத்து வாழ்க்கையின் அவசரத்திலிருந்தும் பரபரப்பிலிருந்தும் விலகி ஒரு புகலிடமாக விளங்கும் கேஎப்ஃஆர், வசதியான தங்குமிடம், விசாலாமான வசதிகள் மற்றும் நிம்மதியோடு மன அமைதிக்கான உறுதியையும் வழங்குகின்றது. பேரருட்திரு 25-ஆவது திசெம் ரின்போச்சே அவர்களால் உருவாக்கப்பட்ட கேஎப்ஃஆர், மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக்கும் நிலையான மற்றும் ஆன்மீக வாழ்க்கை முறைக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது ஆர்வமுள்ளவர்களுக்கு, கேஎப்ஃஆர், லாமா சோங்காபா பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆன்மீக வழிபாடு மற்றும் அக வளர்ச்சி போன்றவற்றிற்கான இடமாகும். ஒருவர் கேஎப்ஃஆரில் தனது மன அமைதி பெறவும், தன்னைப் புரிந்து கொள்ளவும் மற்றும் உத்வேகம் பெறவும் முடியும்.
கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட் பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்
கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்டில் லாமா சோங்காபா மந்திரம்
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/LamaTsongkhapaMigtsema.mp4
மேற்கண்ட காணொளி லாமா சோங்காபாவின் மிக்ட்சேமா மந்திரம் கொண்டுள்ளது. இந்த ஐந்து வரி மிக்ட்சேமா மந்திரத்தின் வரலாறு, சாக்கிய குருவான லாமா ரென்டாவா சோனு லோட்ரா அவர்களின் மீது லாமா சோங்காபா வைத்திருந்த குரு பக்திக்கு மிகப்பெரிய சாட்சியாகும். ஞான புத்தரான, மஞ்சுஸ்ரீ, முதலில் போற்றிக் கூறினார். அதனை லாமா சோங்காபா தனது லாமாவிற்கு அர்ப்பணித்தார். இருந்தாலும், அவரின் லாமா, வார்த்தைகளை மாற்றி அவற்றை மீண்டும் லாமா சோங்காபாவிற்கு அர்ப்பணித்தார். இந்த போற்றிப் பாடல் பின்பு மிக்ட்சேமா மந்திரமாக மாறியது.
மிக்ட்சேமா மந்திரம் லாமா சோங்காபாவை இறையியல் ஞானம், கருணை மற்றும் திறமைகளைப் பிரதிபலிக்கும் மஞ்சுஸ்ரீ , அவலோகிதேஸ்வர் மற்றும் வஜ்ரபானியின் ஆகியோரின் வடிவமாக புகழ்கின்றது. மிக்ட்சேமா மந்திரம், லாமா சோங்காபாவின் உடல், உரை மற்றும் உள்ளம் ஆகியவற்றை ஒலி வடிவில் உள்ளடக்கியுள்ளது. ஆதலால், நாம் மிக்ட்சேமா மந்திரம் உச்சரிக்கும் போது, அம்மந்திரத்தின் புனித அதிர்ப்பொலி நம்முடைய உடலிலும் சுற்றுப்புறத்திலும் பரவி லாமா சோங்கபாவின் ஞானம், கருணை மற்றும் ஆற்றலை ஆசிர்வாதமாக பரவச் செய்கின்றது.
கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்டில் உலகின் மிகப் பெரிய டோர்ஜே ஷுக்டேன் .
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/WorldsLargestDorjeShugdenInKecharaForestRetreat.mp4
கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்டின் அழகு
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/TheBeautyOfKecharaForestRetreat.mp4
மஞ்சுஶ்ரீ விருந்தினர் இல்லம் @ கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்
ட்ரீம் மஞ்சுஸ்ரீ அராவ்ஸ் @ கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட்
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/DreamManjushriArrives.mp4
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- மலேசியாவில் இந்தியர்கள்
- Kechara Spreads the Practice of Dorje Shugden
- Dorje Shugden – The Protector of Our Time
- Spectacular Dorje Shugden Mural in Kathmandu, Nepal!
- Beautiful ancient Tibetan art to share with you
- Which Dorje Shugden Style Is Your Favourite?
- 700 Meet A Buddha (七百人幸睹佛现)
- A good friend to have
- KFR in China Press
- KFR featured on National TV’s meditation programme
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
மிகவும் சக்தி வாய்ந்த மற்றும்
ஞானம் பெற்ற உலக அமைதி காவலர் டோர்ஜே ஷுக்டேன். நம்பிக்கையோடு வழிபடுபவர்களுக்கு ஆசிகள் வழங்கி வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒ௫ இடமாக திகழ்கிறது இந்த கெச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்டீரீட். ??????